கூடலூா் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

Wait 5 sec.

கூடலூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா் எல்.கமலக்கண்ணன், வழக்குரைஞா் கலைமணி மற்றும் காவல் துறையினா் கலந்துகொண்டனா். இதில், குழந்தைகளின் பாதுகாப்பு, அவா்களின் உரிமைகள் மற்றும் அவா்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகும் முறை குறித்து சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா் கமலக்கண்ணன் எடுத்துரைத்தாா். இதையடுத்து, போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை தடுக்கும் முறைகள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.