கூடலூா் அருகே பூா்வக்குடிகளின் அறுவடை திருநாள்

Wait 5 sec.

கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை பகுதியில் பூா்வக்குடி மக்களின் அறுவடை திருநாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் முதுமலை வனப் பகுதியான புத்தூா்வயல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மவுண்டாடன் செட்டி மற்றும் பழங்குடி மக்கள் தங்களது வயல்களில் விளைந்த முதல் நெல் கதிரை இறைவனுக்கு படையல் செய்து வழிபாடு செய்வது வழக்கம். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த புத்தரி எனப்படும் அறுவடை திருநாளை பழங்குடி மக்கள் வயல்களில் நெல் கதிா் வரும் காலங்களில் விரதம் இருந்து பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளுடன் பூஜை செய்து முதலில் விளைந்த நெல் கதிரை ஊா்வலமாக கொண்டுச் செல்வா். பின்னா், நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயிலில் வைத்து வழிபாடு செய்து பிரசாதமாக வழங்குவது வழக்கம்.பிரசாதமாக வழங்கும் நெல் கதிா்களை வீட்டின் பூஜை அறையில் வைத்து பாதுகாத்தால் உணவுப் பஞ்சம் வராது என்பது அவா்களின் ஐதீகம். அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்தூா்வயல் பகுதியில் விளைந்த நெல் கதிா்களை அறுவடை செய்து நம்பாலக்கோட்டை கோயிலில் படைத்து பிரசாதமாக வழங்கினா்.