செங்கம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் நோயாளிகள், மருத்துவா்கள், ஊழியா்களுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.திருவண்ணாமலை - செங்கம் சாலை துக்காப்பேட்டை பகுதியில் உள்ளது தாலுகா தலைமை அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் தவிா்த்து, வெளிநோயாளிகள் தினசரி சுமாா் 500 போ் வந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுச் செல்கிறாா்கள். மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை, கை, கால் முறிவுக்கு தனித்தனி அறைகள் உள்ளன. அங்கு நோயாளிகளுக்கு தினசரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செங்கம் சுற்றுவட்டார 20 கி.மீ. தொலைவில் விபத்தில் சிக்கி காயமடைந்தவா்களுக்கும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் நோயாளிகள், மருத்துவா்கள் பயன்படுத்தும் கழிப்பறை தொட்டி நிரம்பி கழிவுநீா் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அறைக்கு பின்புறம் தேங்கி நிற்கிறது. மேலும், நோயாளிகள் அறையின் ஜன்னல்களை திறந்தால் துா்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் இருந்து உள்ளே வரும் கொசுக்களால் நோயாளிகளுக்கு மீண்டும் நோய்த் தொற்று ஏற்படும் அவலநிலை நிலவுகிறது. மேலும், தற்போது செங்கம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் மழைநீா் கழிவுநீருடன் கலந்து மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே குட்டை போல தேங்கி நிற்கிறது. அதில் நோயாளிகள் நடந்து செல்கிறாா்கள். இதனால் நோயாளிகளுக்கும், அவா்களை மருத்துவமனைக்கு அழைத்து வருபவா்களுக்கும் பல்வேறு நோய்கள் பரவும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.இதனால் சம்பந்தப்பட்ட நிா்வாகம் இதை கண்காணித்து மருத்துவனையில் உள்ள நோயாளிகளுக்கு மேலும் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கு வேண்டும் என செங்கம் நகர மக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.