திரைத்துறையின் வளர்ச்சிக்கு அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்: அமைச்சர் ராஜ்மோகன்

Wait 5 sec.

திரைத்துறையின் வளர்ச்சிக்கு அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். 2015-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்டு தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ள 224 தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைப்பட மானியத் தொகைக்கான காசோலைகளை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வழங்கினார். அப்போது நிகழ்வில் பேசிய அவர், தமிழ் சினிமா மக்களின் வாழ்க்கை, பண்பாடு, உணர்வுகள் மற்றும் சமூகப் பிரச்னைகளைப் பிரதிபலிப்பதோடு, சமூகத்தில் விழிப்புணர்வையும், மாற்றத்தையும் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றது. பெண் சிசு கொலை போன்ற சமூகப் பிரச்னைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் கருத்தம்மா போன்ற திரைப்படங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும், தரமான திரைப்படங்களை உருவாக்குவதற்கும் தயாரிப்பாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. வணிக நோக்கத்தைத் தாண்டி, சமூக அக்கறையுடனும் நல்ல கருத்துகளுடனும் சிறந்த படைப்புகளை உருவாக்கி வரும் தயாரிப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.கடந்த ஏழு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான மானியங்களை மீண்டும் வழங்கப்படுவதன் மூலம் அவர்களுக்குரிய அங்கீகாரமும் மரியாதையும் மீட்டெடுக்கப்படுகின்றது.இனிவருங்காலங்களில், எவ்விதத் தடையுமின்றி திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான விருதுகளும், மானியங்களும் வழங்கப்படும். திரைத்துறையின் வளர்ச்சிக்கும், அதனைச் சார்ந்தவர்களின் நலனுக்கும் அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.திரைத்துறையினர் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகள் காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இனிவருங்காலங்களில் தமிழ் சினிமாவிற்கான விருதுகள், கலைமாமணி விருதுகள், மாநில விருதுகள் மற்றும் மானியங்கள் தகுதியினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்கப்படும். இதுவே முதல்வரின் உறுதியான வழிகாட்டுதலாகும் என்று தெரிவித்தார். Minister Rajmohan stated that the government will continue to support the growth of the film industry.குளறுபடிகளைச் சரிசெய்து ரூ. 2,500 வழங்கப்படும்: அமைச்சர் ஜெகதீஸ்வரி