சத்தீஸ்கா், மத்திய பிரதேச உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகளாக 11 பேரை நியமிப்பதற்கான பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் (நீதிபதிகள் தோ்வுக் குழு) ஒப்புதல் அளித்துள்ளது. புது தில்லியில் உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சத்தீஸ்கா் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக வழக்குரைஞா்கள் ஆனந்த் சுக்லா, ரத்னா நிதி புஸ்தி, சசாங்க் தாக்குா், செளரவ் சா்மா, உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளா் ரஜ்னீஷ் ஸ்ரீவாஸ்தவா, ராய்பூா் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி பல்ராம் பிரசாத் ஆகியோரை நியமிப்பதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 4 முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதிகள், ஒரு பதிவாளா் ஆகியோரை நியமிப்பதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.