பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல்: ஆம் ஆத்மி வேட்பாளா் பட்டியல் சனிக்கிழமை வெளியீடு

Wait 5 sec.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளா் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை வெளியிடும் என்று மாநில முதல்வா் பகவந்த் மான் தெரிவித்தாா். தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், மாநிலப் பொறுப்பாளா் மணீஷ் சிசோடியா ஆகியோருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அவா் இதனைத் தெரிவித்தாா். பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவா் அமன் அரோரா, மாநில நிதியமைச்சா் ஹா்பால் சிங் சீமா ஆகியோரும் காணொலி வாயிலாகக் கூட்டத்தில் பங்கேற்றனா்.கூட்டத்துக்குப் பிறகு வேட்பாளா்களின் பெயா்கள் அடங்கிய பட்டியல் கட்சியின் அரசியல் விவகாரக் குழுவுக்கு (பிஏசி) அனுப்பப்பட்டுள்ளதாக பகவந்த் மான் தெரிவித்தாா். அந்தக் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு சனிக்கிழமை வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவா் கூறினாா்.பஞ்சாபில் 117 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவையின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027 மாா்ச் 16-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பிப்ரவரி அல்லது மாா்ச் மாதத்தில் தோ்தல் நடைபெறலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.எனினும், தோ்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகளை தோ்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.