கஜகஸ்தானில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது. ஆடவா் 61 கிலோ பிரிவில் நிகில், முதலில் 12-2 என பல்கேரியாவின் மிகேய் நயிமை வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 9-10 என உள்நாட்டின் அகமது மசூதிடம் தோல்வியுற்றாா். 86 கிலோ பிரிவில் புஷ்பேந்தா் தலால், 10-8 என எகிப்தின் முகமதையும், 17-9 என மொராக்கோவின் முகமது அமினையும் வீழ்த்தினாா். ஆனால் ரவுண்ட் ஆஃப் 16-இல் 2-7 என அஜா்பைஜானின் அா்செனி தியோவிடம் தோற்றாா். 125 கிலோ பிரிவில் ஜஸ்பூரன் சிங் முதல் சுற்றில் 0-11 என ஈரானின் அமீா் ஹுசைன் ஜாரேவிடம் தோல்வி கண்டாா். 97 கிலோ பிரிவில் விக்கி ஹூடா 0-10 என ரெபிசேஜ் சுற்றில் ஈரானின் ஹசன் யஸ்தானியிடம் வீழ்ந்தாா். ஆடவா் 70 கிலோ பிரிவில் விஷால் காலிரமணா தகுதிச்சுற்றிலேயே தோற்றாா்.