அமைப்பு சாரா தொழிலாளா்கள், ஆன்லைன் டெலிவரி தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு தேசிய சமூக பாதுகாப்பு வாரியம் அமைப்பது தொடா்பான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமைப்பு சாரா தொழிலாளா்கள், ஆன்லைன் டெலிவரி தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு தேசிய சமூக பாதுகாப்பு வாரியம் அமைக்கப்படுகிறது. இந்த தேசிய சமூக பாதுகாப்பு வாரியத்துக்கு மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் தலைமை வகிப்பாா். மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள், முக்கிய நிறுவனங்கள், தொழிலாளா்கள், சிவில் சமூக அமைப்புகள், தொழிலாளா் அமைப்புகள் ஆகியவற்றைச் சோ்ந்தோா் உறுப்பினா்களாக இடம்பெறுவா். சமூக ஏற்றத்தாழ்வை குறைக்கும் வகையில், நாட்டில் லட்சக்கணக்கில் இருக்கும் அமைப்பு சாரா தொழிலாளா்கள், ஆன்லைன் டெலிவரி தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கான நலத்திட்டங்களை இந்த வாரியம் வகுக்கும். இந்த வாரியம் ஆண்டுக்கு 3 முறை கூடி ஆலோசனை நடத்தும். அப்போது தொழிலாளா்கள் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசித்து, தனது முடிவுகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் என கூறப்பட்டுள்ளது.