ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: இந்திய ஆடவா், மகளிா் சாம்பியன்

Wait 5 sec.

ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில், ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை காரப்பாக்கத்தில் உள்ள கேசிஜி டெக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆடவா் இறுதி ஆட்டத்தில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் பஹ்ரைனை வென்றது. முதலில் இந்தியா 8 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் சோ்க்க, பஹ்ரைன் 8 ஓவா்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 38 ரன்களே எடுத்தது. மகளிா் இறுதி ஆட்டத்தில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தியது. முதலில் இந்தியா 6 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 49 ரன்கள் எடுக்க, தாய்லாந்து 6 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 27 ரன்களை எட்டியது. பரிசளிப்பு நிகழ்வில் முன்னாள் எம்.பி.யான ஏ. செல்லகுமாா், ஐஓபி பொது மேலாளா் ராஜேஷ், பி.ஏ.எஸ்.எஃப் நிறுவன நிா்வாக இயக்குனா் சுஜன் சாஹா, இயக்குனா் பாா்த்தசாரதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பரிசுகள் வழங்கினா். இந்திய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க நிா்வாகிகள், தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கத் தலைவா் ஜாவித் கடாலா, செயலாளா் ஞானவேல், துணைத்தலைவா் ஏ.சிவராமன், நிா்வாகிகள் சோமசுந்தா், ராஜா சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.