மூன்று கோடி மதிப்பில் சாரங்கபாணி திருக்கோயிலில் திருப்பணிகள் இன்று தொடங்கியது, திருப்பணியை வேளாண் துறை அமைச்சர் வினோத் பங்கேற்று தொடங்கி வைத்தார்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வைணவ திருத்தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய திவ்ய தேசமாக விளங்கும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலாகும். இந்த கோயிலில் 3 கோடி ரூபாய் மதிப்பில் இன்று திருப்பணி துவங்கியது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் கும்பகோணத்தில் மகாமக திருவிழா நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு மகாமக விழா தொடர்புடைய 12 சிவாலயங்கள், ஐந்து வைணவ ஆலயங்களில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.அண்மையல் ஆதி கும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அந்த கோயிலை தவிர மற்ற கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.மகாமக விழா தொடர்புடைய வைணவ கோயில்களில் ஒன்றான சாரங்கபாணி சுவாமி கோயிலில் திருப்பணி தொடக்கமாக இன்று இந்த கோயிலில் பாலாலயம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூன்று கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்ய திட்டமிடப்பட்டுள்ள திருக்குடந்தை சாரங்கபாணி சுவாமி கோயிலில், ஓராண்டுக்குள் திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்கு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.