தேவர் ஜெயந்தி: இபிஎஸ், வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மரியாதை!

Wait 5 sec.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் பலரும் இன்று மரியாதை செலுத்தி வருகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக அமைச்சர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதையடுத்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியும் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், தேசியமும் தெய்வீகமும் தன் இரு கண்களாக கொண்டு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்றும் பேரவையில் முதலில் தேவர் படத்தைத் திறந்தவர் எம்ஜிஆர் என்றும் புகழாரம் சூட்டினார்.தேசப்பற்றையும், தெய்வீகத்தையும் வாழ்வின் இரு கண்களாகக் கொண்டு, தியாகத்தையும் நேர்மையையும் தனது வாழ்வியல் நெறியாகக் கொண்ட போற்றுதலுக்குரிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை பெருநாளில், அவருடைய பெரும் வாழ்வையும் புகழையும் போற்றி வணங்குகிறேன்.… pic.twitter.com/1WRmye4XD6— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) October 30, 2026தொடர்ந்து அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், வி.கே. சசிகலா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் தேவருக்கு மரியாதை செலுத்தினார்கள். தமிழக முதல்வர் விஜய், சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. Thevar Jayanthi: EPS, Vaiko, TTV Dhinakaran pays tribute to muthuramaliga thevarதிமுக, அதிமுக ஆதரவளித்தால் ஏற்பேன்; ஒருமுறை என்னை பேரவைக்கு அனுப்பிப் பாருங்கள்! சீமான்