நடிகை நஸ்ரியா துபை புரமோஷனில் அணிந்து வந்த ஆடைக்கு இணையவாசிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைந்து வந்தார்கள். இந்தக் கேலிக்கும் விமர்சனங்களும் பதில் அளிக்கும் விதமாக நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். அதில் சூசகமாக விமர்சனங்களுக்குப் பதில் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லன் உள்பட பிரபலங்கள் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதற்கான புரமோஷன்கள் நடைபெற்று வருகின்றன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிப்பதாக நஸ்ரியா நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். நேற்று துபையில் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நஸ்ரியா மஞ்சள் ஆடையை அணிந்திருந்தார். அது எக்ஸ் பக்கத்தில் இணையவாசிகள் பலரிடையே, “ஏன் திடீரென இவ்வளவு கவர்ச்சி, ஆபாசம்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. நய்யாண்டி படத்துல நஸ்ரியா இடுப்புல தனுஷ் கை வைக்கிற மாதிரி ஒரு சீன். நஸ்ரியா ஒத்துக்கல, இவனுங்களும் சரினு விடாம வேற ஒரு புள்ளய நிக்க வைச்சு இடுப்ப புடிச்சு அத நஸ்ரியா மாதிரி காட்டுனாங்க. அதுக்கே கேஸ் போட்ட நஸ்ரியா இப்ப இப்டி ஒரு காஸ்ட்யூம்ல..#nazriya #nazriyanazim #actress pic.twitter.com/YtqxfoWds9— Ketta paiyan sir intha Kumaru (@kumaru_007) October 26, 2026இந்தப் புகைப்படங்களை நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். பின்னர், ஸ்டோரியில் ”உங்கள் கற்பனைகள் நனவாகட்டும், சிக்கல்கள் விலகிச் செல்லட்டும்; அதன் பிறகு நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம்!” எனக் கூறியுள்ளார். ஜென்ஸிக்களின் பாணியில் டெலுலு, பைலு, சில்லுலு என அந்த வரிகள் கவனம் ஈர்த்துள்ளன. அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிலடியாக இதனை வைத்துள்ளார் என அவரது ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகிறார்கள். View this post on Instagram நஸ்ரியா பகிர்ந்த ஸ்டோரிதுரந்தர் படத்தை நகலெடுத்த கிங்? ஷாருக்கானின் போஸ்டருக்கு கடும் விமர்சனங்கள்!Nazriya Nazim hits back at trolls after criticism over her 'Scene' Dubai event outfit; shares cryptic Instagram story