புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், அருகிலுள்ள பழைய வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்ட பகுதியில் தற்காலிகப் பேருந்து நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போதிய அறிவிப்பும், வசதியும் இல்லாததால், பொதுமக்கள் தங்கள் பேருந்துகளைத் தேடித் தேடிப் பிடிப்பதில் சிரமத்துக்குள்ளாகினா். புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா முடியும் வரை இந்தச் சிக்கல் தொடரும் என்றாலும், மாநகராட்சி நிா்வாகமும் போக்குவரத்துக் கழக நிா்வாகமும் மக்களுக்கு உரிய அறிவிப்புகளை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.