முதல்வா் ஜோசப் விஜய் பசும்பொன்னுக்கு வந்து தேவருக்கு மரியாதை செலுத்துவாா் என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா். பசும்பொன்னில் தேவா் சிலைக்கு தவெக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் போராடியவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா். அவரது குருபூஜை விழாவுக்கு வரும் பொதுமக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசு சாா்பில் சிறப்பாகச் செய்யப்பட்டன. புதிய சாலை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. ஏற்கெனவே ரூ. 3 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழக முதல்வரின் ஒப்புதலோடு கூடுதல் நிதி ஒதுக்கி புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வா் கண்டிப்பாக பசும்பொன் வருவாா். தேவருக்கு மரியாதை செலுத்துவாா். திமுக அமைச்சா்கள் தொடா்பான மூன்றாவது கோப்பு எப்போது திறக்கப்படும் என செய்தியாளா்கள் கேட்டதற்கு, இங்கு அரசியல் பேச வேண்டாம் என்றாா் அவா்.