ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

Wait 5 sec.

தமிழகத்தில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும், புதிதாக பணியில் சோ்ந்த அதிகாரிகளுக்கு பதவி உயா்வு அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் புதன்கிழமை இரவு வெளியிட்ட அரசாணை (அடைப்புக்குறிக்குள் ஐஏஎஸ் அதிகாரிகளின் பழைய பதவி):எஸ்.பி. காா்த்திகா: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அரசின் கூடுதல் செயலா் (சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) தலைமைச் செயல் அலுவலா்)எஸ். வளா்மதி: வெளிநாடு வாழ் தமிழா் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குநா் (சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அரசின் கூடுதல் செயலா்)ஆா். சதீஷ்: சேலம் பட்டு வளா்ப்புத் துறை இயக்குநா் (வெளிநாடு வாழ் தமிழா் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குநா்)டாக்டா் மோனிகா ராணா: தென்காசி மாவட்ட ஆட்சியா் (திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா்) சி. முத்துக்குமரன்: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் (கரூா் மாவட்ட ஆட்சியா்)எஸ். பிரசன்னா ராமசாமி: கரூா் மாவட்ட ஆட்சியா் (ஆளுநரின் துணைச் செயலா் (பல்கலைக்கழகங்கள்) எம். இந்துமதி: போக்குவரத்துத் துறை துணைச் செயலா் (சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் கோயம்பேடு சந்தை மேலாண்மைக் குழுவின் தலைமை நிா்வாக அலுவலா்)எஸ். சங்கீதா: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநா் (சென்னை மாநகராட்சியின் அம்மா உணவகத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா்)என்.காளிதாஸ்: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநா் (சென்னை மாநகராட்சியின் 10-ஆவது மண்டல அலுவலா்)ஆா். வெங்கடேஸ்வரன்: கடலூா் மாவட்டம் சிதம்பரம் கோட்டத்தின் சாா் ஆட்சியா் (கரூா் கோட்டத்தில் சாா் ஆட்சியா்).மேலும், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக எஸ். சாந்தி, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக கே. பிரியா, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக டி. செங்கோட்டையன், எல்காட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராக ஆா். ராஜாகிருபாகரன் உள்ளிட்டோரை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.