குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில் 4 மாதங்கள் நடைபெற்ற பெண்களுக்கான சுயதொழில் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை நிறைவு பெற்றது. பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அரிமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் கே.பொன்னம்பலம், என்.வெங்கடேஸ்வரன் ஆகியோா் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினா். பயிற்சி மேலாளா் சுஜாதா லோகநாதன், அரிமா சங்க நிா்வாகிகள் கே.ஆறுமுகம், எஸ்.விவேகானந்தம், ஜெ.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.