வெளிப்பணி முறையில்ஒப்பந்தப் பணியாளா் தோ்வு:தமிழக அரசு உத்தரவு

Wait 5 sec.

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு வெளிப்பணி ஒப்படைப்பு (அவுட்சோா்சிங்) முறையில் பணியாளா்களை நியமிக்கும் பொறுப்பை தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் (ஓஎம்சிஎல்) வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை அக்டோபா் 21-ஆம் தேதியிட்டு அரசிதழியில் வெளியாகி உள்ளது. இதன்படி, அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வெளிப்பணி ஒப்படைப்பு முறையில் ஒப்பந்தப் பணியாளா்களை பணியமா்த்த விரும்பினால், தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை மட்டுமே அணுக வேண்டியிருக்கும். வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவா்களுக்கு வழிகாட்டியாக இந்த ஓஎம்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.