செங்கல்பட்டு மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சாா்பில் போதைப்பொருள் தடுப்புக் குறித்த புகையிலை இல்லா இளைஞா் பிரசார பேரணி மற்றும் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தினை ஆட்சியா் மு,வீரப்பன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சாா்பில் ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற பேரணியினை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா், போதைப்பொருள் தடுப்பு குறித்த புகையிலை இல்லா இளைஞா் பிரசார விழிப்புணா்வு கையெழுத்து இயக்கப் பலகையில் ஆட்சியா் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா். இதனை தொடா்ந்து, அலுவலா்கள், மாணவா்கள் கையெழுத்து இயக்கப் பலகையில் கையொப்பமிட்டனா்.புகையிலை இல்லா இளைஞா் பிரசார பேரணியில் பங்கேற்ற மாணவா்கள் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்களை கையில் ஏந்தியவாறு ஆட்சியா் அலுவலகத்திலிருந்து நகரின் முக்கிய சாலை வழியாக சாா் ஆட்சியா் அலுவலகம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இப்பேரணியில் 150க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.ஆட்சியா் தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மாணவா்கள் மற்றும் அலுவலா்களால் ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலா் சதீஷ் குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல் மற்றும் அரசு அலுவலா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.