பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும்!

Wait 5 sec.

சென்னை பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை பூந்தமல்லி முதல் வடபழனி இடையேயான மெட்ரோ சேவை கட்டுமானப் பணிகள் இன்னும் முடிக்கப்படாததால் நாளை முதல் சேவை இருக்காது என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. போரூர் முதல் வடபழனி இடையே ரயிலை இயக்க பெறப்பட்ட தற்காலிக அனுமதி நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து நிரந்தர அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் ஜோசப் விஜய் இருவரும் இணைந்து கடந்த அக். 11 ஆம் தேதி கொடியசைத்துத் தொடக்கிவைத்தனர். Poonamallee - Vadapalani metro rail service will operate as usualவாய் மட்டும்தான் வேலை செய்யுது! 'போக்கிரி' பட வசனத்தைக் குறிப்பிட்டு இபிஎஸ் விமர்சனம்!