ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை இத்துடன் முடிவுக்கு வரவிருக்கிறதென ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கேப் டவினில் தொடங்கிய கடைசி டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் தென்னப்பிரிக்கா 329 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 429 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழுந்த தென்னாப்பிரிக்கா 387 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 288 ரன்கள் தேவைப்படுகிறது.இந்த நிலையில், ஆஸி. முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. லபுஷேன் எல்பிடபிள்யூ மூலம் ரபாடா ஓவரில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தத் தொடரில் முதல் போட்டியில் (37+37) 74 ரன்களும், இரண்டாவது போட்டியில் (14+39) 53 ரன்களும் எடுத்தார். தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் (0+4) 4 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். மொத்தமாக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லபுஷேன் 4,857 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 43.37ஆக இருக்கிறது. தொடக்க காலங்களில் அசத்திய மார்னஸ் லபுஷேன் கடையாக சில ஆண்டுகளில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறார். இந்தத் தொடருடன் அவரது டெஸ்ட் கிரிக்கெட்டின் வாழ்க்கை முடிவுக்கு வருமென பலரும் கூறி வருகிறார்கள். அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் விளையாட இருக்கிறது. The downfall of Marnus Labuschagne needs some serious study.Test match stats:Before 1/1/2025Innings : 96Runs : 4337Average : 48.250/100: 23/11Since 1/1/2025Innings : 26Runs : 520Average : 21.750/100: 2/0Dropped off a cliff. #SAvAUS https://t.co/IHC8HB7PNy— Erika Morris (@ErikaMorris79) October 31, 2026இந்திய ஒருநாள் அணியில் ஜம்மு காஷ்மீர் வீரர் ஆகிப் நபி..! அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா? A string of blunders... Is Marnus Labuschagne’s Test cricket career coming to an end?