திருவாரூர் அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலி: தலா ரூ.3 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய் அறிவிப்பு

Wait 5 sec.

மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜோசப் விஜய் ஆறுதல் கூறியுள்ளதுடன் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து... திருவாரூர் மாவட்டம், புதூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜோசப் விஜய் ஆறுதல் கூறியுள்ளதுடன் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.இதுபற்றி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:திருவாரூர் மாவட்டம், புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(49) மற்றும் அவரது மகன் ஆதித்யன் (21) ஆகியோர் கடந்த 5.10.2026 ஆம் தேதி விவசாயக் கூலி வேலைக்காக நஞ்சை நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தபோது, உயர் அழுத்த மின்பாதை மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மோதியதில் மின்கம்பத்தில் இருந்த ‘வீ கிராசாரம்’மின்கம்பியுடன் டிராக்டர் மீது விழுந்ததில், டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்த ஆதித்யன் மீது மின்சாரம் பாய்ந்ததோடு, அருகில் வேலை செய்துகொண்டிருந்த அவரது தந்தை ராஜா, இவரைக் காப்பாற்ற முயன்றபோது அவர்மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். CM Condolence and Relief - Electrocution death at Thiruvarur Dist CMPRFவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி எஃப்-18: இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து