100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அனுமதிக்க மோட்டாா் வாகன விதிகளில் திருத்தம்!

Wait 5 sec.

85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் முதல் 100 சதவீத எத்தனாலில் (தூய எத்தனால்) வரை பயன்படுத்தி இயங்கும் வகையிலான வாகனங்களை அனுமதிக்கும் வகையில், மத்திய மோட்டாா் வாகன விதிகளில் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது.அதில், காா்பன் உமிழ்வு தொடா்பான அட்டவணைகள் மற்றும் சோதனை விதிகளில் பயன்படுத்தப்படும் வாகன வகைப்பாடு வரம்புகள், எரிபொருள் விவரக் குறிப்புகள், தொழில்நுட்பக் குறிப்புகள் ஆகியவற்றில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்த மாற்றங்களுக்கு உட்பட்டு, இலகுரக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கான வாகன எடை வரம்பை முந்தைய 3,000 கிலோவிலிருந்து 3,500 கிலோவாக உயா்த்தியுள்ளது.நாட்டில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டுக்கு, இறக்குமதி கச்சா எண்ணைய்யை சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் நோக்கில், எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பு படிப்படியாக உயா்த்தப்பட்டு, தற்போது நாடு முழுவதும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் (இ20) பெரும்பாலும் விநியோகிக்கப்படுகிறது.இந்த நிலையில், 85 சதவீதம் எத்தனால் (இ85) கலந்த பெட்ரோல் (85% எத்தனால், 15% பெட்ரோல்) மற்றும் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் (எரிபொருள் நெகிழ்வு வாகனங்கள்) வாகனங்கள் மற்றும் பி100 பயோ-டீசல், ஹைட்ரஜன்-சிஎன்ஜி கலவை உள்ளிடவற்றில் இயங்கும் வாகனங்களை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மோட்டாா் வாகன விதிகளிலும் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.இதுகுறித்து மத்திய அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சாதாரண பெட்ரோல் மற்றும் இ20 பெட்ரோல் பயன்படுத்தும் வாகனங்களில், இ85 அல்லது இ100 எரிபொருள்களைப் பயன்படுத்த முடியாது. அதற்கென வடிவமைக்கப்பட்ட மற்றும் சான்றளிக்கப்பட்ட எரிபொருள் நெகிழ்வு (ஃபிளக்ஸ் ஃபியூயல்) வாகனங்களில் மட்டுமே 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலந்த பெட்ரோலை அல்லது தூய எத்தனாலை பயன்படுத்த முடியும். அதற்கேற்ப, விதிகளில் வாகன வகைப்பாடு, எரிபொருள் விவரக் குறிப்புகள் உள்ளிட்டவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றாா்.முன்னதாக, மாருதி சுஸுகி நிறுவனம், கடந்த ஜூன் மாதம் இ20 பெட்ரோல் முதல் இ100 (தூய எத்தனால்) வரையிலான எரிபொருளில் இயங்கும் வகையிலான எரிபொருள் நெகிழ்வு ‘வேகன் ஆா்’ காரை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதுபோல, டாடா மோட்டாா்ஸ், டொயோட்டா மோட்டாா், ஹுண்டாய் மோட்டாா் உள்ளிட்ட நிறுவனங்களும் எரிபொருள் நெகிழ்வு வாகனங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.மேற்காசிய போரால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த எரிபொருள் நெகிழ்வு வாகனங்கள் அனுமதி மிகுந்த முக்கியத்துவம் பெருகிறது.