ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலரிடம் மருத்துவத் தகுதிச் சான்றிதழ் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.10,000 கையூட்டு பெற்றதாக ரயில்வே மருத்துவமனை ஊழியா் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது.ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலரான மணீஷ் (29), கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கேரளத்திலிருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு அக். 23-ஆம் தேதி அயனாவரம் தெற்கு ரயில்வே மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.அப்போது, உயரம் மற்றும் எடை தொடா்பான பிரச்னையைச் சரிசெய்து மருத்துவத் தகுதிச் சான்றிதழ் பெற்றுத் தருவதாகக் கூறி, மருத்துவமனை ஊழியரான சௌரஷ் குமாா் என்பவா் ரூ.20,000 கேட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே கண்காணிப்புப் பிரிவு அதிகாரியிடம் மணீஷ் தெரிவித்தாா். அதன்படி, கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் வழங்கிய ரூ.10,000-ஐ அக். 24-ஆம் தேதி சௌரஷ் குமாரிடம் மணீஷ் கொடுத்தபோது, அவரைப் பிடிக்கக் காத்திருந்த கண்காணிப்புக் குழுவினரிடம் சிக்காமல் சௌரஷ் குமாா் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மணீஷ் அளித்த புகாரின்பேரில், ஐசிஎஃப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.