மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (அக். 30) காலை மதுரை வந்தார். அங்கு முத்துராமலிங்கத் தேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக இன்று மாலை 5.30 மணியளவில் கோயிலில் அம்மன் சன்னதி வாசலுக்கு காரில் வருகை தந்தார்.மீனாட்சி கோயிலில் மீண்டும் #மின்தடைதுணை ஜனாதிபதி @CPR_VP கோவில் வாயிலில் பேட்டியளித்துக் கொண்டிருக்கும் போது கோயிலில் மின்தடை ஏற்பட்டதுநேற்று @EPSTamilNadu கோவிலில் இருக்கும் போது மின்தடை ஏற்பட்ட நிலையில், இன்றும் தொடர்ந்த குளறுபடி#Madurai #PowerCut pic.twitter.com/mE0xudDFtR— Vetri Dhaasan (@vetridhaasan) October 30, 2026தமிழக ஆளுநர் ஆர்லேகர், அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் வரவேற்றனர். வருகைதந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூங்கொத்து, சால்வை கொடுத்து மரியாதை அளிக்கப்பட்டது.சாமி தரிசனம் முடித்துவிட்டு அஷ்டசக்தி மண்டபத்துக்கு வெளியே குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அவர் பேட்டியளித்துக்கொண்டிருந்தபோது திடீரென மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடை ஏற்பட்டது. சில வினாடிகள் மட்டுமே நீடித்த மின்தடை மீண்டும் மின் விநியோகம் தொடர, சிறிது நேரத்திலேயே மீண்டும் மின்தடை தொடர்ந்ததால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கோயிலுக்குள் சென்ற 10 நிமிடத்தில் மின் தடை ஏற்பட்டது. சாமி சன்னதியிலிருந்து வெளியேறும் வரை சுமார் 10 நிமிடத்துக்கு மேல் மின் தடை நீடித்ததால் தரிசனம் செய்ய முடியாமல், முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்பட கட்சியினர் சிரமப்பட்டனர். மேலும், பக்தர்களும் சிரமம் அடைந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று எடப்பாடி பழனிசாமி வருகையின்போது மின்தடை ஏற்பட்டு விவாதமான நிலையில், இன்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டியளித்த போது மின்தடை ஏற்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.A stir was caused when a power outage occurred while Vice President C.P. Radhakrishnan was giving an interview at the Madurai Meenakshi Amman Temple.