அஸ்ஸாமில் முறையான ஆவணங்களின்றி நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அஸ்ஸாமின் துப்ரி மாவட்டத்தின் வழியாகப் பெருமளவில் வங்கதேசத்தினர் சில நாட்களுக்குள் ஊடுருவக்கூடும் என்ற ரகசியத் தகவல் காவல் துறையினருக்குக் கிடைத்தது. இதையடுத்துத் துப்ரி மாவட்டத்தின் வழியாக முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் 36 வங்கதேசத்தினரைக் காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் வங்கதேசத்தின் ராஜ்சாஹி பிரிவில் உள்ள சாபாய் நவாப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் அதிகாரி கூறியதாவது: "இன்று அதிகாலை 2 மணி முதல் 2.30 மணிக்குள், ஊடுருவல்காரர்கள் துப்ரி மாவட்டத்திற்குள் நுழைய முயற்சிப்பதாக எங்களுக்குத் துல்லியமான தகவல் கிடைத்தது. அவர்கள் எந்தப் பாதையைப் பயன்படுத்துவார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும், அவர்கள் நதி வழியைப் பயன்படுத்தக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது. அதற்கேற்ப, பிரம்மபுத்திரா நதிக்கரையில் உள்ள ஜொகமாயா படகுத் துறையில் எங்கள் காவல் துறையினரை நிறுத்தினோம். அங்கு 36 வங்கதேசத்தினர் பிடிபட்டனர். அவர்களிடம் உள்ள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூடுதல் விவரங்கள் பின்னர் தெரியவரும்" என்றார்.Thirty-six Bangladeshis were arrested in Assam's Dhubri district on Friday for allegedly entering India without valid papers, a police officer said. சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு!