வானிலை! சென்னை, புறநகருக்கு இரவு 7 வரை கனமழை எச்சரிக்கை! (நவ. 2)

Wait 5 sec.

சென்னை மற்றும் புறநகரில் இன்றிரவு 7 மணி வரை கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல், தீவிரப் புயலாக இன்று காலை வலுப்பெற்று, நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு (தமிழ்நாடு) வடகிழக்கே 170 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.இந்த புயல் இன்று மாலை சென்னை கடற்கரையை நெருங்கி, பின்னர் ஆந்திரத்தின் நெல்லூர் மற்றும் நரசபூர் இடையே நள்ளிரவில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதனால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக கடற்கரை மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், அடுத்த மூன்று மணிநேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்றிரவு 7 மணி வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், நீலகிரி, கோவை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.Weather Forecast - Heavy rain warning for Chennai and its suburbs until 7 PM (Nov. 2)என்ன, சென்னை, திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையா? திடீர் அறிவிப்பு ஏன்?