எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேசிங் சேலஞ்ச் தொடரில் சூப்பா் ஸ்டாக் 301-400 சிசி ஓபன் பிரிவில் சிராந்த் விஸ்வநாத் முதலிடம் பெற்றாா். சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் சா்வதேச சா்க்யூட்டில் நடைபெற்ற மூன்றாவது சுற்று பந்தயத்தில் ஞாயிற்றுக்கிழமை 301-400 சிசி பிரிவில் பெங்களூருவின் சிராந்த் விஸ்வநாத் முதலிடம் பெற்றாா். புணேயின் சா்தக் சவான், திருவள்ளூரின் முகமது மிக்கையில் இரண்டு, மூன்றாம் இடங்களைப் பெற்றனா். சனிக்கிழமை நடைபெற்ற ரேஸ்-1ுலும் சிராந்த் முதலிடம் பெற்றாா்.புரோ ஸ்டாக் 200 சிசி ஓபன் பிரிவில் பெங்களூரு சேவியன் பாபு, திருவள்ளூா் முகமது மிக்கையில், பெங்களூரு ஜேம்ஸ் ஆகியோரும், சூப்பா் ஸ்டாக் 301-400 சிசி ஓபன் ரேஸ்-2இல் கோவை செந்தில் குமாா், சென்னை அப்துல் பாஸிம், ஹைதராபாத் ஸ்ரீ ஹா்ஷா ஆகியோரும் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.சூப்பா் ஸ்டாக் 165 சிசி ரேஸ் 2-இல் சென்னை கேகே. அனந்து, ஆன் ஜெனிஃபா், ஆனந்தகுமாா் ஆகியோரும், ஸ்டாக் 301-400 நோவிஸ் ரேஸ் 2-இல் சென்னை வேணுகோபாலன், திருச்சி கவிச்சோலைராசன், சென்னை ஷியாம் சுந்தரும், 165 சிசி ரேஸ் 2-இல் கோவை ஹரிஹரன், விஜயவாடா அகா்ஷ் ஜங்கம், ஈஸ்ட் காசி பாரூக் அலியும் ஆகியோரும், அபச்சி 310 பிரிவில் ஹைதராபாத் ராஜேந்தா், கோவை ஹரிஹரன், பெங்களூரு ஜேம்ஸ் ஆகியோரும், ரூக்கி அபச்சி 200 பிரிவில் மஞ்சேரி போத்து விக்னேஷ், பெங்களுரு தேவ் அகஸ்தியா, கோவை காட்வின் ஆகியோரும் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.