ஓம் வெளியீடு ஒத்திவைப்பு... தனுஷுக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

Wait 5 sec.

சீன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா தனக்காக ஓம் படத்தினை ஒத்திவைத்த தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சூர்யா நடிப்பில் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள சீன் படத்தை சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.நாயகியாக நஸ்ரியா, வில்லனாக நஸ்லென் நடித்துள்ள இப்படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான இரு பாடல்கள் மற்றும் கிளிம்ஸ் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.இப்படத்தின், டிரைலர் மற்றும் பாடல்கள் நேற்று இரவு 7.30 மணிக்கு வெளியானது. சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.முன்னதாக தனுஷின் ஓம் படமும் தீபாவளிக்கு வெளியாக இருந்தது. ஆனால், சூர்யா மற்றும் ரஜினி படங்களுக்காக தனது படத்தை ஒத்திவைப்பதாக தனுஷ் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இது குறித்து சூர்யா டிரைலர் வெளியீட்டு விழாவில், “நடிகர் தனுஷுக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவரது ட்வீட் ஒன்றில் எங்களது படம் தீபாவளிக்கு வெளியாவதால் ஓம் படத்தை ஒத்திவைப்பதாகக் கூறியிருந்தார். அதற்கு நன்றி” எனக் கூறியுள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பஞ்சாபியர்களுக்குச் சண்டையிடத் தெரியும்; யாருக்காகவும் அச்சப்பட மாட்டேன்: தில்ஜித் தோசன்ஜ் 'Om' release postponed... Suriya thanks Dhanush!