இந்தியா கூட்டணியின் பேரணி மாபெரும் வெற்றி பெற வேண்டும்: டி.கே. சிவகுமார்

Wait 5 sec.

இந்தியா கூட்டணியின் பேரணி மாபெரும் வெற்றி பெற வேண்டும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) தெரிவித்தார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் கண்டனப் பேரணியும் பொதுக்கூட்டமும் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் பேசியதாவது:வாக்களிப்பது இந்த நாட்டு வாக்காளர்களின் கடமையாகும். வாக்களிக்கும் உரிமை என்பது வாழ்வதற்கான உரிமை. லட்சக்கணக்கான மக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். நாம் ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். இந்தப் பேரணி தொடர்ந்து சென்று மாபெரும் வெற்றி பெற வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒவ்வொரு வாக்காளரையும் பாதுகாப்பது நமது கடமையாகும்.கர்நாடகத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்க விரும்பினார்கள். நாங்கள் அதற்காகப் போராடுவோம் என்று டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.மேக்கேதாட்டு திட்டத்துக்காக 2,500 ஏக்கா் மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது: முதல்வா் டி.கே. சிவகுமாா்Karnataka Chief Minister D.K. Shivakumar stated on Sunday (Nov. 1) that the INDIA alliance's rally should be a grand success.