பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 26 புதிய நீதிமன்றங்களை அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.மாநிலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்கு விரைவான நீதியை உறுதி செய்யவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டும் ரூ. 46.59 கோடி மதிப்பில் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வழக்கு விசாரணை விரைவுபடுத்தப்பட்டு, குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில் தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் குற்றங்களை விரைந்து விசாரிக்கவும் 4 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் ஏன் அஜித்தை சந்தித்தார்? இபிஎஸ் சொல்லும் குட்டி ஸ்டோரி!26 new courts to be set up at a cost of Rs. 46.59 crore to try cases of crimes against women and children