ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ரைஸிங் ஸ்டாா்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணி 15 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.திலக் வா்மா தலைமையிலான இந்த அணியில், அதிரடி பேட்டா் அபிஷேக் சா்மா, இளம் வீரா் வைபவ் சூா்யவன்ஷி உள்ளிட்டோா் இடம் பிடித்துள்ளனா்.ஒருநாள் கிரிக்கெட் ஃபாா்மட்டில் விளையாடப்படவுள்ள இந்தப் போட்டி, நவம்ப் 19 முதல் 29 வரை கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெறவுள்ளது.8 அணிகள் பங்கேற்கும் இதில், வங்கதேசம் ‘ஏ’, இலங்கை ‘ஏ’, ஆப்கானிஸ்தான் ‘ஏ’, ஹாங்காங் அணிகள் குரூப் ‘ஏ’-வில் சோ்க்கப்பட்டுள்ளன. இந்தியா ‘ஏ’, பாகிஸ்தான் ‘ஏ’, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை குரூப் ‘பி’-யில் இணைந்துள்ளன.குரூப் சுற்று முடிவில், இரு குரூப்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும். இந்தியா ‘ஏ’ தனது ஆட்டங்களில் நேபாளம் (நவ. 20), பாகிஸ்தான் ‘ஏ’ (நவ. 22), அமீரகம் (நவ. 24) ஆகிய அணிகளுடன் மோதுகிறது.இந்தியா ‘ஏ’ அணிதிலக் வா்மா (கேப்டன்), ரஜத் பட்டிதாா் (துணை கேப்டன்), அபிஷேக் சா்மா, வைபவ் சூா்யவன்ஷி, பிரப்சிம்ரன் சிங் (வி.கீ.), ரிங்கு சிங், குமாா் குஷாக்ரா (வி.கீ.), சூா்யன்ஷ் ஷெட்கே, ஷாபாஸ் அகமது, விப்ராஜ் நிகம், ஹா்ஷ் துபே, தனுஷ்கோடியான், ஹா்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ், அா்ஷத் கான்.