நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியிலிருந்தும் ரிஷப் பந்த் விலகல்!

Wait 5 sec.

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலிருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார்.இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.பிரதான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகள் தங்களுக்குள் மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது இரண்டாவது போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளிலிருந்து விலகிய ரிஷப் பந்த், மூன்றாவது போட்டியிலிருந்தும் விலகியுள்ளார்.இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலிருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார். ரிஷப் பந்த் நல்ல உடல்தகுதி பெற்றுள்ளபோதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மூன்றாவது போட்டியிலிருந்து விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பெறாத ரிஷப் பந்த், டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடவுள்ளார். பிரதான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக காயம் ஏதும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே அவர் மூன்றாவது போட்டியிலிருந்து விலகியுள்ளார்.இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 19 ஆம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.Rishabh Pant has withdrawn from the third unofficial Test match against the New Zealand A team.என்னுடைய வேலை சரியான முடிவுகளை எடுப்பது, அனைவரும் விரும்பும் முடிவை எடுப்பதல்ல: கௌதம் கம்பீர்