தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மாநில எல்லையில் இருந்து 5 கி.மீ சுற்றளவில் செயல்பட்டு வரும் மதுபான கடைகள் அனைத்தையும் இன்று முதல் 5 வரையும் மற்றும் 7 ஆகிய நாள்களில் தற்காலிகமாக மூட ஆட்சியா் ச.கவிதா உத்தரவிட்டுள்ளாா். ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. இதையொட்டி தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச மாநில எல்லையிலிருந்து 5 கி.மீ சுற்றளவில் வரும் திருவள்ளூா் வருவாய் மாவட்ட வரம்புக்குள் அடங்கும் பகுதிகளில் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதைச் சாா்ந்த மதுக்கூடங்கள் வாக்கு பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி முதல் 5-ஆம் தேதி வரை மாலை 5 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணும் நாளான 7 -ஆம் தேதி அன்றும் தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த மதுக்கூடங்களின் மீது 1981-இன் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் அறிவித்துள்ளாா்.