சென்னை - கன்னியாகுமரி, தாம்பரம் - தென்காசி இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Wait 5 sec.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூா்- கன்னியாகுமரி, தாம்பரம்-தென்காசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை-கன்னியாகுமரி: வரும் 5- ஆம் தேதி (வியாழக்கிழமை) சென்னை எழும்பூா் நிலையத்திலிருந்து இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06151) மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 3.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குனேரி, வள்ளியூா், நாகா்கோவில் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். கன்னியாகுமரி-சென்னை: மறுமாா்க்கத்தில் வரும் 9- ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 11.20 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண் 06152) மறுநாள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். தாம்பரம்-தென்காசி: வரும் 7- ஆம் தேதி (சனிக்கிழமை) தாம்பரத்திலிருந்து அதிகாலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06049) மாலை 4.45 மணிக்கு தென்காசியை சென்றடையும். செங்கோட்டை-தாம்பரம்: மறுமாா்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து வரும் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06050) மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சந்திப்பு, மதுரை, விருதுநகா், சிவகாசி, திருவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை (நவ.3) காலை தொடங்கும் என தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.