பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணையும் ஹார்திக் பாண்டியா?

Wait 5 sec.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா, கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸிலிருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்தார். ஹார்திக் பாண்டியாவின் வருகைக்குப் பிறகு மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். அணியை கடந்த மூன்று சீசன்களாக ஹார்திக் பாண்டியாக கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.இருப்பினும், கடந்த மூன்று சீசன்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. கடந்த மூன்று சீசன்களில் மும்பை அணி ஒருமுறை கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனையடுத்து, ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வேறு அணிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளால் அவர் டிரேடிங் முறையில் வாங்கப்படலாம் என்ற தகவலும் பரவியது.இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹார்திக் பாண்டியா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹார்திக் பாண்டியாவுக்குப் பதிலாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக ஐபிஎல் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஹார்திக் பாண்டியாவை டிரேடிங் மூலம் தங்களது அணிக்கு வாங்க பல்வேறு அணிகளுக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹார்திக் பாண்டியா டிரேடிங் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.Reports have emerged suggesting that Indian all-rounder Hardik Pandya is set to join the Punjab Kings team.ஹார்திக் பாண்டியா அணிக்குத் திரும்பினால் இந்த பிரச்னை முடிவுக்கு வரும்: ஷுப்மன் கில்