சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு மாதத்தில் பவுனுக்கு ரூ.8,360 குறைந்த தங்கம் விலை, நவம்பர் மாதத்தின் இரண்டாவது நாளான இன்று ரூ.360 உயர்ந்துள்ளது.சா்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிா்ணயிக்கப்படுகிறது.தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வரும் நிலையில், கடந்த வராம் தொடக்கத்தில் விலை உயா்ந்து காணப்பட்டது.தங்கம் விலை உயர்வுஇந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் பவுனுக்கு ரூ.8,360 குறைந்த தங்கம் விலை, நவம்பர் மாதத்தின் இரண்டாவது நாளான இன்று ரூ.360 உயர்ந்துள்ளது.அதன்படி, திங்கள்கிழமை(நவ.2) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ரூ.12,775-க்கும், பவுனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.1,02,200-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலையில் மாற்றமில்லைவெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2 லட்சத்துக்கு விற்பனையாகிறது.In Chennai, the price of gold has increased by Rs. 360 per sovereign today (Nov. 2), and it is being sold at Rs. 1,02,200.சென்னை மாநகராட்சியில் 1,309 பயன்பாடற்ற மின்னணு பொருள்கள் சேகரிப்பு