சென்னை மற்றும் புறநகரில் பகல் ஒரு மணி வரை மழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல், தீவிரப் புயலாக இன்று காலை வலுப்பெற்று, நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 160 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு (தமிழ்நாடு) வடகிழக்கே 180 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.இந்த புயல் இன்று மாலை சென்னை கடற்கரையை நெருங்கி, பின்னர் ஆந்திரத்தின் நெல்லூர் மற்றும் நரசபூர் இடையே நள்ளிரவில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதனால், சென்னை, திருவள்ளூர் உள்பட வட தமிழக கடற்கரை மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், அடுத்த மூன்று மணிநேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Weather! Rain to continue in Chennai and its suburbs until 1 PM! (Nov. 2)இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது ‘முரசு’ புயல்? சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!