நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷா

Wait 5 sec.

நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டுவரும் காங்கிரஸின் செயல் தொடர்ந்தால், அவர்கள் எதிர்க்கட்சிகளாகவே இருக்க வேண்டிய நிலையே ஏற்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (நவ. 1) விமர்சித்தார். சண்டிகரில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:''பொய் கூறுவது, குழப்பத்தை விளைவிப்பது, எதிர்மறை எண்ணங்களைப் பரப்புவது, நாடாளுமன்றச் செயல்பாடுகளுக்குத் தடையாக இருப்பது, நாடாளுமன்ற விவகாரங்களை வீதிகளுக்குக் கொண்டு வந்து அமளியை உருவாக்குவது. இவைதான் காங்கிரஸ் இயல்பு என்றால், மேலும் ஐந்து ஆண்டுகளை எதிர்க்கட்சியில் கழிக்கத் தயாராகுங்கள்.ஒருபுறம், நரேந்திர மோடி நாட்டை வியக்கத்தக்க வேகத்தில் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறார். சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டுள்ளது. நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. இப்போது, ​​என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் 2029ஆம் ஆண்டு டிசம்பர் 31-க்குள், பஞ்சாப் உள்பட ஒட்டுமொத்த நாட்டையும் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து முழுமையாக விடுவிப்பதை நாங்கள் உறுதி செய்வோம்'' என அமித் ஷா பேசினார்.