நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிகவும் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கவுள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஹாமில்டனில் இன்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இருப்பினும், இந்திய அணி தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.டி20 தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிகவும் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கவுள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னைப் பொருத்தவரை, ஒவ்வொரு தொடரையும் வெல்வது மிகவும் முக்கியம். நியூசிலாந்தில் வெற்றி பெறுவது மட்டும் முக்கியமல்ல, தொடர்களையும் வெல்ல வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிகவும் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களுடன் விளையாடவுள்ளோம்.மிகவும் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களுடன் விளையாடுகிறோம் என்பதைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள். ஆகிப் நபி மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளனர். குர்னூர் 9-10 போட்டிகளில் விளையாடியுள்ளார். அர்ஷ்தீப் சிங் 18 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டால், உண்மையில் அதற்கான பாராட்டுகள் இவர்களையே சென்றடையும்.பேட்டிங்கில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் உள்ளார்கள். ஆனால், பந்துவீச்சில் அப்படியில்லை. அதிலும் குறிப்பாக, வெளிநாட்டு ஆடுகளங்களில் பலரும் புதிதாக விளையாடுகிறார்கள். அதனால், ஒருநாள் தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டால் அதற்கான பாராட்டுகள் பந்துவீச்சாளர்களையேச் சேரும் என்றார்.மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹார்திக் பாண்டியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும், மூத்த வீரரான முகமது சிராஜ் அணியில் இடம்பெற்றுள்ளார்.இந்திய அணிக்காக முகமது சிராஜ் 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.ndian team head coach Gautam Gambhir has stated that the Indian side will enter the ODI series against New Zealand with a relatively inexperienced group of bowlers.சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இஷான் கிஷன் புதிய சாதனை!