புது தில்லி: நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 23 சதவீதம் அதிகரித்து, ரூ. 2.31 லட்சம் கோடியை எட்டியுள்ளது. உள்நாட்டு விற்பனை மூலமான ஜிஎஸ்டி வசூல் 16 சதவீதம் அதிகரித்து ரூ. 1.59 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மூலமான வருவாய் 42 சதவீதம் அதிகரித்து ரூ. 72,246 கோடியாகவும் உயர்ந்துள்ளது.கடந்த ஏப்ரலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், அக்டோபரில் இரண்டாவது அதிகபட்ச வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.மத்திய நிதியமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அரசுத் தரவுகளின்படி, உள்நாட்டு நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதிகள் மூலம் கிடைத்த வலுவான வருவாயால், அக்டோபர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 23 சதவீதம் அதிகரித்து, ரூ. 2.31 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது கடந்த அக்டோபரில் ரூ.2,31,290 கோடியாக இருந்தது. உள்நாட்டு விற்பனை மூலமான மொத்த ஜிஎஸ்டி வசூல் 16 சதவீதம் அதிகரித்து ரூ. 1.59 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மூலமான வருவாய் 42 சதவீதம் அதிகரித்து ரூ. 72,246 கோடியாக உயர்ந்துள்ளது.மொத்த வருவாய் ரூ. 2.31 லட்சம் கோடி வசூலில், மத்திய ஜிஎஸ்டி ரூ. 42,935 கோடியும், மாநில ஜிஎஸ்டி ரூ. 51,340 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 1.37 லட்சம் கோடிக்கு மேல் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி திரும்பப் பெறுதல் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 6.5 சதவீதம் அதிகரித்து, ரூ. 27,934 கோடியாக உள்ளது. திரும்பச் செலுத்தப்பட்ட தொகைகளைச் சரிசெய்த பிறகு, அக்டோபர் மாதத்தில் நிகர ஜிஎஸ்டி வசூல் 26 சதவீதம் அதிகரித்து, ரூ. 2.03 லட்சம் கோடியாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், மொத்த ஜிஎஸ்டி வசூல் 13.2 சதவீதம் அதிகரித்து, ரூ. 14.77 லட்சம் கோடியாகவும், நிகர வசூல் 13 சதவீதம் அதிகரித்து, ரூ. 12.69 லட்சம் கோடியாக உள்ளது.2017-இல் ஜிஎஸ்டி அமலானதில் இருந்து இதுவரை இல்லாத அதிகபட்சமாக கடந்த ஏப்ரலில் ரூ.2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கப் பெற்றது. இரண்டாவது அதிகபட்சமாக அக்டோபரில் ரூ.2.31 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.கடந்த செப்டம்பரில் ரூ.2.03 லட்சம் கோடியும், கடந்த ஜூலையில் ரூ.2.11 லட்சம் கோடியும் கிடைக்கப் பெற்றது. நடப்பு நிதியாண்டில் 4-ஆவது முறையாக ஜிஎஸ்டி ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது.Gross GST Collections Increase 23% To Rs 2.31 Lakh Crore In October Goods and Services Tax (GST) refunds increased 6.5 per cent year-on-year to Rs 27,934 crore in October.காங்கிரஸ் அரசியல் எதிர்காலத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி: பாஜக விமர்சனம்!