கனமழை: சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

Wait 5 sec.

கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (நவ. 2) நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான ‘முரசு’ புயல் இன்று நள்ளிரவு ஆந்திரத்தில் கரையைக் கடக்கக்கூடும் என எதிா்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது ‘முரசு’ புயல்? சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!Due to a heavy rain warning, the University of Madras examinations that were scheduled for today (Nov. 2) have been postponed.