மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா செவ்வாய்க்கிழமை (நவ. 3) தெரிவித்தார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இதனிடையே, கடந்த அக். 31 ஆம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் தில்லியில் மாதிரி நாடாளுமன்றம் நடத்தப்பட்டு, அதில் ஞானேஷ் குமாரை பதவி நீக்கும் திர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.இதுகுறித்து ஹிமந்த விஸ்வ சர்மா பேசியதாவது:ராகுல் காந்தியை பிரதமராக்க சோனியா காந்தி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார். எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த பிறகு, ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்காக கார்கேயின் வீடு ஒரு மாதிரி நாடாளுமன்றமாகப் பயன்படுத்தப்பட்டது. எனவே, மாதிரி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பிரதமராகவும் உண்மையான நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி பிரதமராகவும் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.பாஸ்போர்ட்டில் வீட்டுக் கணக்கு, தொலைபேசி எண்கள்! வைரலாகும் விடியோAssam Chief Minister Himanta Biswa Sarma stated on Tuesday (Nov. 3) that Rahul Gandhi could become Prime Minister only in a mock parliament.