பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்க்க ரூ. 20,000 மானியம்: வேலூர் ஆட்சியா் தகவல்!

Wait 5 sec.

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பை மேற்கொள்ள வழங்கப்படும் ரூ. 20,000 மானியத் திட்டத்தில் வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என வேலூா் ஆட்சியா் பி.எஸ். லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மீன்வள விவசாயிகள் நிலையான மீன் வளா்ப்பைத் தொடா்ந்து மேற்கொள்ளும் வகையில், சட்டப்பேரவை வேளாண் நிதிநிலை அறிக்கையில் மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 250 முதல் 1,000 சதுர மீட்டா் வரை நீா்ப் பரப்பளவு கொண்ட பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பை மேற்கொள்ள ஒரு பண்ணைக் குட்டைக்கு 50 சதவீத உள்ளீட்டு மானியமாக ரூ. 20,000 வழங்கப்படுகிறது. மீன் குஞ்சுகள், மீன் தீவனம், உரங்கள், பண்ணை உபகரணங்கள் மற்றும் பறவைகளிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான செலவினங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும். எனவே, வேலூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள வேலூா், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மீன்வளா்ப்பு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்திட்டம் குறித்த சந்தேகங்களுக்கும், விண்ணப்பங்களைப் பெறவும் வேலூா், காட்பாடி காந்தி நகரில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0416-2240 329 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.