பெட்டிக் கடையில் 19 கிலோபுகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Wait 5 sec.

செய்யாறை அடுத்த மோரணம் காவல் சரக பகுதியில், பெட்டிக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 19 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் மோரணம் காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணி தலைமையிலான போலீஸாா் ராந்தம் கூட்டுச் சாலைப் பகுதியில் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் ராந்தம் துரைராஜ் நகரில் உள்ள பெட்டிக் கடையை சோதனையிட்டனா். இதில், பாக்கெட்டுகளில் 19 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மோரணம் போலீஸாா் பெட்டிக் கடை வியாபாரி துரைசாமி மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனா்.