அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் எந்த அடிப்படையில் விரைவாக கையெழுத்திடப்பட்டன? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதிக்கத் தயாராக உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விவாதத்துக்கு நடுவராக மோகன் பாகவத் உள்பட யாரை வேண்டுமானாலும் அழைத்துவாருங்கள் என்றும், எந்தவொரு மேடையிலும், நேரத்திலும், இடத்திலும் விவாதிக்கத் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சவால் விடுத்து 24 மணி நேரம் ஆகிவிட்டதாகவும், தாங்கள் விவாதிக்க தைரியமாக முன்வர வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு ராகுல் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக விடியோ வெளியிட்டு ராகுல் காந்தி பேசியுள்ளதாவது:என் மீது 45 அவதூறு வழக்குகள் உள்ளன. வெளிநாட்டு தொடர்பு குறித்து என் பேச்சுக்கு ஏன் வழக்கு தொடர தைரியமில்லை. இந்த விவாதத்தை நாட்டில் எந்தவொரு இடத்திலும் மோடி வைத்துக்கொள்ளலாம். முடிந்தால் என் மீது வழக்கு தொடருங்கள். அதையும் சந்திக்கத் தயார், தீபாவளி வாழ்த்துகள் மோடிஜி எனக் குறிப்பிட்டுள்ளார்.மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்Ready to debate with PM Modi! Rahul’s challenge: Mohan Bhagwat to act as moderator