நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது.எவரெஸ்ட் சிகரப் பகுதியில் உள்ள பெரிச்சே என்ற இடத்தில் ஃபிஷ் டெயில் ஏர் மற்றும் டைனாஸ்டி ஏர் ஆகிய இரு தனியார் நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்தில் ஃபிஷ்டெயில் ஏர் ஹெலிகாப்டரில் பயணித்த வெளிநாட்டுப் பயணி உயிரிழந்தார். அதன் கேப்டன் கே.சி. பிரஜ்வலும், ஏர் டைனஸ்டி ஹெலிகாப்டரின் கேப்டன் ரவீந்திர பிரஜாபதியும் காயமடைந்துள்ளார்.உயிரிழந்த வெளிநாட்டுப் பயணி குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள சிம்ரிக் ஏர் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.Two helicopters crash at Pheriche in Everest region, one dead.TRAGEDY IN THE AIRAccording to officials, a Fishtail Air helicopter and an Air Dynasty helicopter collided while landing at the Pheriche helipad.“A passenger of Fishtail Air died and a captain sustained… pic.twitter.com/aredXGm8Pe— Rahul Shivshankar (@RShivshankar) November 3, 2026Two helicopters collide at the base of Everest!ஃபுளோரிடாவில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து