தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! (நவ. 3)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 3) சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.உலகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலகப் பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, தங்கம் விலை சந்தையில் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகிறது. இந்தச் சூழலில் கடந்த சனிக்கிழமை (அக். 31) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,480 குறைந்து விற்பனை செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 45 உயர்ந்து, ரூ. 12,775-க்கும், சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து, ரூ. 1,02,200-க்கும் விற்பனையானது.இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 3) சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,02,400-க்கும் கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,800-க்கும் விற்பனையாகிறது.இன்றைய வெள்ளி விலை வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 200-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.In Chennai, the price of gold jewellery has increased by Rs. 200 per sovereign today (Nov. 3).தங்கம் விலை உயர்வு! இன்றைய (நவ. 2) நிலவரம்!