இந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.50 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்பு!

Wait 5 sec.

தில்லியில் இந்தியா கூட்டணியினர் நடத்திய போராட்டத்தால் ரூ. 11,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மூலம் பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 1), தில்லியில் பிரம்மாண்ட பேரணி, பொதுக் கூட்டம் நடைபெற்றது.இந்தப் பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), லிபரேஷன் கட்சி பொதுச் செயலர் தீபாங்கர் பட்டாச்சார்யா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட இண்டி கூட்டணி தலைவர்கள், கார்கே இல்லத்தில் இருந்து திறந்த வாகனங்களில் மின்டோ சாலை - கன்னாட் பிளேஸ் சந்திப்பை சென்றடைந்தனர்.கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், கன்னாட் பிளேஸ் பகுதியில் இருந்து ராம்லீலா மைதானத்துக்கு பேரணியாக சென்றதை அடுத்து ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்தியா கூட்டணியினர் நடத்திய போராட்டத்தால் பாதுகாப்பு கருதி 2.50 லட்சத்துக்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டன. ராம்லீலா மைதானத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் காஷ்மீரி கேட், மோரி கேட், சாந்தினி சௌக், சாவ்ரி பஜார், காரி பாவோலி, நயா பஜார், சதர் பஜார், அஜ்மேரி கேட், தர்யாகஞ்ச், கமலாஸ் மார்க்கெட், ஜமாஸ் மார்க்கெட், பஹர்கஞ்ச், லஜ்பத் ராய் மார்க்கெட், கினாரி பஜார், தரிபா கலன், பல்லிமாறன், ஃபதேபுரி, திலக் பஜார், கனாட் பிளேஸ், பாலிகா பஜார், கஃபர் மார்க்கெட் மற்றும் கரோல் பாக் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகைக்கு வியாபாரம் சூடுபிடிக்கும் நிலையில், இந்தியா கூட்டணியினரின் போராட்டத்தால் சுமார் ரூ.10,000 முதல் 11,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக தில்லி வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் தலைவர் பிரிஜேஷ் கோயல் வருத்தம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பிரிஜேஷ் கோயல் பேசுகையில், “பேரணி நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள சுமார் 20 முதல் 25 முக்கிய வியாபாரம் நடைபெறும் சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 3 லட்சம் கடைகளில் கிட்டத்தட்ட 2,50,000 கடைகள் மூடப்பட்டன. இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.The traders' association had, in the run-up to the rally, written multiple letters to the Opposition leaders, including Rahul Gandhi, appealing for the postponement of the rally to post-Diwali.