ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி சர்மா 53 இடங்கள் முன்னேறி அசத்தியுள்ளார்.இந்திய அணி அதன் சொந்த மண்ணில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அண்மையில் விளையாடியது. இந்தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.இந்தத் தொடரில் இந்திய அணியின் இளம் வீராங்கனை வைஷ்ணவி சர்மா அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வைஷ்ணவி சர்மா, கடைசி ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வைஷ்ணவி சர்மா ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 53 இடங்கள் முன்னேறி 94-வது இடம் பிடித்துள்ளார். சயாலி சத்கரே 28 இடங்கள் முன்னேறி 85-வது இடமும், கிராந்தி கௌட் ஒரு இடம் முன்னேறி 24-வது இடமும் பிடித்தனர். பேட்டர்களைப் பொருத்தவரையில், தொடக்க வீராங்கனை பிரதீகா ராவல் மூன்று இடங்கள் முன்னேறி 28-வது இடம் பிடித்துள்ளார். ஷஃபாலி வர்மா எட்டு இடங்கள் முன்னேறி 65-வது இடம் பிடித்துள்ளார்.Reports have emerged suggesting that Indian all-rounder Hardik Pandya is set to join the Punjab Kings team.பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணையும் ஹார்திக் பாண்டியா?