தென்னிந்திய நகரங்கள், மிக விரைவான ரயில் சேவையைப் பெறும் வகையில், பெங்களூரு நகரை சென்னை மற்றும் ஹைதராபாத்துடன் இணைக்கும் மிக முக்கிய அதி விரைவு ரயில் தடங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அனுமதி அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஞாயிற்றுக்கிழமை புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் சேவை துவக்க விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.அனுமதி வழங்கப்பட்டுள்ள இரு வழித்தடங்களிலும் எதிர்பார்க்கப்படும் பயண நேரம் குறித்தும், தென்னிந்தியா முழுவதும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதில் அதிவேக இரயில்களின் பங்கு குறித்தும் விளக்கிப் பேசியிருந்தார்.இந்த புதிய வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும்போது பெங்களூர் - சென்னை இடையேயான பயண நேரத்தை வெறும் 73 நிமிடங்களாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதுபோல, பெங்களூர் - ஹைதராபாத் இடையிலான பயண நேரம் சுமார் 2 மணி நேரம் 10 நிமிடங்களாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறருது.இந்த புதிய வழித்தடங்கள் மூலம், தென்னிந்திய நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் வெகுவாகக் குறைவதுடன், இந்நகரங்களுக்கு இடையே பயணிக்கும் தொழில் முனைவோர், பணிநிமித்தமாக செல்வோர் மிகுந்த பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2026 - 27 பொது பட்ஜெட்டில், நாடு முழுவதும் இவ்விரு அதிவேக ரயில் சேவை உள்பட 7 வழித்தடங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. Bengaluru to Chennai in 70 minutes! About the 2 new high-speed rail corridors!